சென்னை: மைவி3 ஆட்ஸ் செயலியில் வீடியோ பார்த்தால் ரூ.5 முதல் ரூ.1,500 வரை வரும் எனக் கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக, மைவி3 ஆட்ஸ் நிறுவனம் மீது கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சக்தி ஆனந்தன் சென்னை நிதிநிறுவன மோசடி வழக்ககளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன் கடந்த 5ஆம் தேதி சரணடைந்தார். அவரை ஜூலை 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.