சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் மெரினா கடற்கரைச் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திரமோகன் அவரது பெண் தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டியுள்ளனர்.
இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் போலீசாரிடம் அநாகரீகமாக பேசிய தனலட்சுமி தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “ தான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர். தன் மீது தவறாக புகார் அளிக்கபட்டுள்ளது. நடைபெற்ற தவறுக்காக தான் மன்னிப்புக் கோருகிறேன்” இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க:சென்னையில் போலீசாரிடம் தகராறு செய்த இருவர் கைது.. மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு!