சென்னை:சென்னையில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி வரை மாஞ்சா நூல் தயாரித்தல், விற்றல் உள்ளிட்டவைக்கும், ட்ரோன்கள் பறக்கவும் தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் மாஞ்சா நூல் காத்தாடியால் பலர் பலத்த காயமடைந்தது மட்டுமல்லாமல், பல உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் மாஞ்சா நூல் காத்தாடி தயாரிக்கவும், காத்தாடி பறக்க விடவும், விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் தடை விதித்து சென்னை காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. அதனை மீறியவர்கள் மீது கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதாவது, காவல்துறை உத்தரவை மீறி மாஞ்சா நூல் காத்தாடி தயாரித்து, விற்றவர்கள் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மாஞ்சா நூல் காத்தாடி மீதான தடையை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.