தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீசை தாக்கிவிட்டு எஸ்கேப் ஆன ரவுடி.. துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐக்கு பாராட்டு! - Chennai police Encounter

chennai rowdy Rohit Raj Encounter: காவலர்களை தாக்கி விட்டு தப்ப முயன்ற நபரை பெண் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவத்தை பாராட்டும் வகையில், உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டியுள்ளார்.

சென்னை காவல் ஆணையாளர் அருண்,  பெண் எஸ்.ஐ கலைச்செல்வி
சென்னை காவல் ஆணையாளர் அருண், பெண் எஸ்.ஐ கலைச்செல்வி (Credit -ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 3:23 PM IST

சென்னை: சென்னை டி.பி சத்திரம் பகுதியில் காவல்துறையினரை பீர் பாட்டிலால் தாக்கி தப்ப முயன்ற ரவுடியை பெண் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி.பிசத்திரம் பகுதியைச் சேர்ந்த ரோகித் (எ) ரோகித் ராஜ் என்பவர், தற்போது செம்மஞ்சேரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 14 வழக்குகள் உள்ளது. இவர் டி.பி சத்திரம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் மீது டி.பி சத்திரம், அமைந்தகரை மற்றும் அசோக் நகர் ஆகிய காவல் நிலையங்களில் உள்ள 3 கொலை வழக்குகளில் பிடியாணைகள் நிலுவையில் உள்ளன. எனவே, நோகித்ராஜை பிடிக்க டி.பி.சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், ரோகித் கீழ்பாக்கம் பழைய கல்லறை பகுதியில் பதுங்கிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, காவல் குழுவினர் இன்று அதிகாலை ரோகித்தைப் பிடிக்க முயன்றபோது, ரோகித் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து தலைமைக் காவலர்கள் சரவணக்குமார், பிரதீப் ஆகிய இருவரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்ததாக் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், உடனே உதவி ஆய்வாளர் கலைச்செல்வி எச்சரிக்கை செய்து பிடிக்க முற்பட்ட போது, ரோகித் உதவி ஆய்வாளரையும் தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து, உதவி ஆய்வாளர் தற்காப்பிற்காக துப்பாக்கியால் ரோகித்ராஜின் கால்முட்டியின் கீழ் சுட்டு பிடித்ததாக கூறப்படுகிறது.

காயடைந்த தலைமைக் காவலர்கள் சரவணக்குமார், பிரதீப் மற்றும் ரோகித் ஆகிய மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் இன்று (செவ்வாய்கிழமை) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit -ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தீபக் ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கூலிப்படை.. முழு பின்னணி! - deepak raja murder case

ABOUT THE AUTHOR

...view details