சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது.
அந்த வழக்கில், கடந்து ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஜூலை 29) முடிவடைந்தது. இதனை அடுத்து, சென்னை புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அதனை அடுத்து, ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.