சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 3 தினங்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ):குளச்சல் (கன்னியாகுமரி), ஆயிக்குடி (தென்காசி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) ஆகிய இடங்களில் 3 செ.மீ மழையும், இரணியல் (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), பெரியாறு (தேனி) தலா 2 செ.மீ மழையும், முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), கருப்பாநதி அணை (தென்காசி), வத்திராயிருப்பு (விருதுநகர்), காக்காச்சி (திருநெல்வேலி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்) தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை :அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி - 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. ஏனைய கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 42.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 42.2 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8 டிகிரி செல்சியஸ், வேலூரில் 41.6 டிகிரி செல்சியஸ், திருச்சியில் (விமான நிலையம்) 41.3 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 40.8 டிகிரி செல்சியஸ், மதுரையில் (விமான நிலையம்) 40.6 டிகிரி செல்சியஸ், தர்மபுரி, மதுரை (நகரம்) & திருத்தணியில் 40.1 டிகிரி செல்சியஸ், நாமக்கல் & தஞ்சாவூரில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38 டிகிரி - 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழகக் கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி - 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23 டிகிரி - 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 39.4 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
மே.1, 2:மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மே.3 முதல் மே.5 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே.6, 7: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
மே.1 முதல் மே.3 வரை: தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
மே.4,5:அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.