சென்னை:தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மாவட்டம் | மழை அளவு (சென்டிமீட்டரில்) |
மைலாடி (கன்னியாகுமரி) | 10 சென்டிமீட்டர் |
மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) | 9 சென்டிமீட்டர் |
அணைகெடங்கு (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), பெரியாறு (தேனி) | 8 சென்டிமீட்டர் |
கொட்டாரம், நாகர்கோயில், பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, சுருளக்கோடு (கன்னியாகுமரி), நாலுமுக்கு, ஊத்து (திருநெல்வேலி) | 7 சென்டிமீட்டர் |
முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) | |
களியல், அடையாமடை, பேச்சிப்பாறை, சிவலோகம் (சித்தர் II) சிற்றாறு-I , பூதப்பாண்டி குளச்சல், திருப்பதிசாரம் AWS, குருந்தன்கோடு (கன்னியாகுமரி), பாபநாசம், காக்காச்சி (திருநெல்வேலி) | 5 சென்டிமீட்டர் |
குழித்துறை (கன்னியாகுமரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), கன்னிமார், முக்கடல் அணை (கன்னியாகுமரி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) | 4 சென்டிமீட்டர் |
அடவிநயினார் அணை (தென்காசி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), சிவகிரி (தென்காசி), தேவகோட்டை (சிவகங்கை), தேக்கடி (தேனி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கருப்பாநதி அணை (தென்காசி) பரமத்திவேலூர் (நாமக்கல்), அம்பாசமுத்திரம், சேர்வலாறு அணை, மாஞ்சோலை, மணிமுத்தாறு (திருநெல்வேலி), UPASI தேயிலை அறிவியல் துறை AWS (கோயம்புத்தூர்) | 3 சென்டிமீட்டர் |
அதிகபட்ச வெப்பநிலை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட குறைவாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 39.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 28 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 17 டிகிரி முதல் 24 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 39.5 டிகிரி செல்சியஸ் (0.4 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.9 டிகிரி செல்சியஸ் (-0.3 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:நேற்று மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 5:30 மணி அளவில் வலுப்பெற்று, 8:30 மணி அளவில் வங்க தேச கேப்புப்பாராவிலிருந்து சுமார் 440 கி.மீ தெற்கு தென்மேற்கேயும், மேற்கு வங்காளம் - சாகர் தீவிலிருந்து 440 கி.மீ தெற்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை தீவிர புயலாக வலுப்பெற்று நள்ளிரவு வங்க தேச-கேப்புப்பாராவிற்கும் மேற்கு வங்காளம் சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும் நேரம் தரைக்காற்று மணிக்கு 110-120 கி.மீ வேகத்திலும் இடை இடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால், இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை முதல் மே 31 ஆம் தேதி வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:இன்று முதல் மே 29 வரை அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பாகவும்/இயல்பை விட சற்று குறையக்கூடும்.
நாளை அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.மே 27 முதல் 29 வரையில், அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரிசெல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.