தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடையை ரெடியா வச்சுக்கோங்க... அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பெய்யுமாம்! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - tn weather report - TN WEATHER REPORT

ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை தொடர்பான கோப்புப்படம்
மழை தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2024, 5:20 PM IST

சென்னை: தமிழகத்தில் பொதுவாக அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ) : மீ.மாத்தூர் (கடலூர்) 13 செ.மீ, தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) 12 செ.மீ, சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 11 செ.மீ, சேந்தமங்கலம் (நாமக்கல்) 10 செ.மீ, ஜெயம்கொண்டம் (அரியலூர்) 9 செ.மீ, மணிமுத்தாறு அணை, பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி) தலா 8 செ.மீ, நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்) 7 செ.மீ, திருச்சி விமான நிலையம் (திருச்சி) 6 செ.மீ,
டேனிஷ்பேட்டை (சேலம்) 5 செ.மீ, மஞ்சளாறு (தஞ்சாவூர்) 4 செ.மீ, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) 3 செ.மீ, திருப்பூர், அஞ்சட்டி (கிருஷ்ணகிரி) தலா 2 செ.மீ, தக்கலை (கன்னியாகுமரி) 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்): அதிகபட்ச வெப்பநிலை :- திருச்சி விமான நிலையம் : 38.9 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை: ஈரோடு: 18.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

இதையும் படிங்க :மழை எப்போது பெய்யும்? இனி கையிலே அப்டேட் இருக்கு.. தமிழக அரசின் TN-Alert செயலி அறிமுகம்!

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை :
ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அக்.5 - 9 : தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கன மழையும், திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அக். 10: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details