சென்னை:தமிழக உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):சோழிங்கநல்லூர் (சென்னை) 12, பூந்தமல்லி ARG (திருவள்ளூர்) 11, பூந்தமல்லி (திருவள்ளூர்) 10, சோளிங்கர் (ராணிப்பேட்டை) 9, NIOT பள்ளிக்கரணை (சென்னை), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), கொளப்பாக்கம் (காஞ்சிபுரம்), மீனம்பாக்கம் (சென்னை), சென்னை விமான நிலையம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), ACS மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) தலா 7, பெருங்குடி (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), கிருஷ்ணகிரி, வாலாஜா (ராணிப்பேட்டை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்), ஆலந்தூர் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 6, மேட்டுப்பட்டி (மதுரை), அடையார் (சென்னை), காரையூர் (புதுக்கோட்டை), பெரியபட்டி (மதுரை), திருவள்ளூர், திருவாலங்காடு (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 5 சென்ட்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலையாக மதுரையில் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ், தென்தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 32 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 21 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 37.7 டிகிரி செல்சியஸ் (+0.5° செல்சியஸ்) மற்றும் மீனம்பாக்கத்தில் 38.9 டிகிரி செல்சியஸ் (+1.4° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக ஜூன் 18 மற்றும் ஜூன் 19:தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
ஜூன் 20 மற்றும் ஜூன் 21:தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 22:தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 23:தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 24: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
ஜூன் 18 முதல் 22 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.