சென்னை : தமிழகத்தில் பொதுவாக ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ) :மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை) தலா 13 செ.மீ, மண்டலம் 08 மலர் காலனி (சென்னை) 12 செ.மீ, திருவாலங்காடு (திருவள்ளூர்) 11 செ.மீ, அம்பத்தூர் (சென்னை) 10 செ.மீ, வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 9 செ.மீ, சென்னை (N) AWS (சென்னை) 8 செ.மீ, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 7 செ.மீ, திருத்தணி (திருவள்ளூர்) 6 செ.மீ, வாலாஜா (ராணிப்பேட்டை) 5 செ.மீ, சாய்ராம் கல்லூரி ARG (செங்கல்பட்டு) 4 செ.மீ, திருத்தணி PTO (திருவள்ளூர்) 3 செ.மீ, BASL முகையூர் (விழுப்புரம்) 2 செ.மீ, திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி) 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்): அதிகபட்ச வெப்பநிலை :- மதுரை விமான நிலையம்: 41.6 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை :- ஈரோடு: 19.6 டிகிரி செல்சியஸ்
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை :
வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு (26.09.2024 மற்றும் 27.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி - 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
இதையும் படிங்க :"வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்" - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு :அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி -26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி - 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி -28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.