சென்னை: சென்னை கோடம்பாக்கம் பகுதியில் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் நாளை நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் இரண்டு வழித்தடங்களிலும் நாளை (மார்ச் 17) காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை புறநகர் மின்சார ரயில்கள் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடைய பயணங்களை தொடர, மெட்ரோ ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல், பயணிகளின் வசதிக்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், வழக்கமாக இயக்கும் பேருந்துகளை விட நாளை கூடுதலாக 150 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.