தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்றத்தூரில் நர்சரி கார்டன் உரிமையாளர் வெட்டிக்கொலை! - nursery garden owner Murder - NURSERY GARDEN OWNER MURDER

Kundrathur nursery garden owner murder: சென்னை குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் உள்ள நர்சரி கார்டன் உரிமையாளர் தங்கதுரை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

chennai-kundrathur-nursery-garden-owner-thangadurai-murder-police-investigation
சென்னை, குன்றத்தூரில் நர்சரி கார்டன் உரிமையாளர் வெட்டி கொலை! போலீஸ் விசாரணை..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 7:54 PM IST

சென்னை: குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை (70). இவர் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், அஞ்சுகம் நகர்ப் பகுதியில் சொந்தமாக நர்சரி கார்டன் வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று (மார்ச் 30) இரவு நர்சரி கார்டனை பூட்டிவிட்டு அதன் உள்ளே படுத்து உறங்கியுள்ளார்.

இதனையடுத்து, இன்று (மார்ச் 31) காலை அவரது மகன் ஆனந்த் சென்று பார்த்த போது, நர்சரி கார்டன் திறக்கப்படாமல் இருந்துள்ளது. பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலில் தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் தங்கதுரை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து குன்றத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார், கொலை செய்யப்பட்டுக் கிடந்த தங்கதுரை உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக தங்கதுரை இங்கு நர்சரி கார்டன் வைத்து நடத்தி வருவதாகவும், இன்றைய தினம் இங்கு செயல்பட்டு வந்த நர்சரி கார்டனை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்து வைத்திருந்த நிலையில் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் அவர் அணிந்திருந்த தங்க மோதிரம் காணாமல் போனது தெரிய வந்தது.

கொலை சம்பவம் நடந்த கடைக்கு எதிரே மதுபான கடை இருப்பதும் இரவு நேரத்தில் குடித்துவிட்டுக் கொள்ளையடிக்கும் நோக்கில் உள்ளே வந்தவர்கள் கொலை செய்துவிட்டு அவரது கையிலிருந்த மோதிரத்தைப் பறித்துச் சென்றார்களா அல்லது முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு - Puducherry Accident

ABOUT THE AUTHOR

...view details