தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்க கடத்தலுக்கு உதவிய அதிகாரி சஸ்பெண்ட்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! - Chennai Airport Immigration officer

Chennai Immigration officer suspend: சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்களில் பயணிப்பவர்களுக்கு, தங்கம் கடத்தல் உள்ளிட்டவைகளுக்கு துணை போன குடியுரிமை அலுவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விமான நிலையம் கோப்புப்படம்
சென்னை விமான நிலையம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 4:15 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முன்னையத்தில், வெளிநாடு செல்லும் விமான பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து அனுப்புவதற்காக குடியுரிமை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

இந்த பிரிவின் தலைமை அலுவலகம் சென்னை சாஸ்திரி பவனில் உள்ளது. இதில் பணியாற்றுவதற்கு காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் பணி அமர்த்தப்படுவர். அந்த வகையில், காவல்துறை உதவி ஆய்வாளர் சரவணன் என்பவர் கடந்த ஓராண்டாக சென்னை விமான நிலைய குடியுரிமை பிரிவில் இம்மிகிரேஷன் (Immigration) அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த இம்மிகிரேஷன் அலுவலர்கள் முறைகேடுகள் எதிலும் ஈடுபடாமல் சரியாக பணியாற்றுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக, விஜிலன்ஸ் பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த விஜிலென்ஸ் பிரிவு கண்காணிப்பின் போது, இமிகிரேஷன் அலுவலர் சரவணன் செயல்பாட்டில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அதையடுத்து, சரவணனை விஜிலென்ஸ் பிரிவு தீவிரமாக தொடர்ந்து கண்காணித்தனர். இதனிடையே, இமிகிரேஷன் பிரிவில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், சரவணன் வெளிநாடுகளுக்குச் செல்ல வரும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் பரிசோதிக்கும் போது முறைகேடுகளில் ஈடுபடுவதும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர், விஜிலன்ஸ் பிரிவினர் சரவணனின்ன் முறைகேடுகள் குறித்த ஆவணங்களுடன் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், விஜிலென்ஸ் பிரிவினர் சென்னை இமிகிரேஷன் பிரிவு தலைமை ஆணையருக்கு சரவணன் குறித்து அறிக்கை அனுப்பினர்.

அதிகாரி செய்த முறைகேடுகள்:அதன் அடிப்படையில், முறைகேட்டில் ஈடுபட்ட சரவணனை இமிகிரேஷன் தலைமை ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சரவணன் குறித்து விஜிலென்ஸ் பிரிவினர் விசாரணை மேற்கொண்டதில், அவர் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்க கடத்தல்களுக்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.

அதாவது, வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் கடத்தல் ஆசாமிகள் சுங்கச் சோதனைக்கு முன்னதாக குடியுரிமைச் சோதனைக்காக இமிகிரேஷன் பிரிவுக்கு வருவார்கள். அப்போது அவர்கள் கடத்தி வரும் தங்கத்தை சரவணன் வாங்கி வைத்துக் கொண்டு, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இமிகிரேஷன் அலுவலர் சரவணனின் செயல்பாடுகள் குறித்து விசாரணை முடிந்து, முறையான அறிக்கை கொடுத்த பின்பு தங்கம் கடத்தல் குறித்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 267 கிலோ தங்க கடத்தலுக்கும் இமிகிரேஷன் அலுவலர் சரவணன் சஸ்பெண்டுக்கும் சம்பந்தம் இல்லை என சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:எத்தியோப்பியாவில் இருந்து ரூ.10 கோடி மதிப்புடைய கொக்கைன் கடத்தல் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details