சென்னை:சென்னை குருநானக் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தைவிட மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், ஏழை எளிய குடும்பத்தில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு மன அழுத்தற்குள்ளாகுவதாகவும் கூறி அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) சார்பில் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து பேசிய இந்திய மாணவர் கூட்டமைப்பு தென் சென்னை மாவட்ட செயலாளர் மணிகண்டன், “ அரசு நிர்ணயித்த கல்வி கட்டத்தை விட அதிகமான கட்டணத்தை குருநானக் கல்லூரி நிர்வாகம் வசூலிக்கிறது. இது குறித்து மாணவர்கள் சார்பில் கல்லூரி கல்வி இயக்ககத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மாணவி லோகேஸ்வரி போராட்டத்தில் ஈடுப்பட்ட போது, தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.