சென்னை:ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் செந்தில் குமார் நேற்று அண்ணா சாலை பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே உள்ள தியேட்டரில் படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது உதவி ஆய்வாளர் செந்தில் குமார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தியேட்டர் ஊழியர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் செந்தில் குமார் "நான் கொஞ்சமா தான் மது அருந்தியுள்ளேன்? என்னை ஏன் படம் பார்க்க அனுமதிக்க மாட்டீர்கள்?" என கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன் அவர்களை தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால், தியேட்டர் ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் செந்தில் குமாரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அதிகாரிகள் உதவி ஆய்வாளர் செந்தில் குமாரிடம் விசாரணை நடத்தி, பின்னர் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
மூதாட்டி தற்கொலை:சென்னை சூளைமேடு தயாளன் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி கன்னியம்மாள் (வயது 70). இவரது கணவர் சந்திரன். இவர்களுக்கு சுரேஷ் மற்றும் செல்வம் என இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் செல்வம் பிரபல ரவுடி திரு-வின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது.
மேலும், பிள்ளைகள் இருவரும் திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வரும் நிலையில் மூதாட்டி கன்னியம்மாள் தனது மூத்த மகன் சுரேஷ் வீட்டிலும், கணவர் சந்திரன் அரும்பாக்கத்தில் வசிக்கும் இளைய மகன் செல்வம் வீட்டிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மூதாட்டி தனது கணவரை பார்ப்பதற்காக மகன் செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் மகன் செல்வம் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையில் இருப்பதால் அவரது இரண்டாவது மனைவி பூங்கொடி அவரை கவனித்து வருகிறார்.
sucide awareness card (Credits - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில், மகன் வீட்டிற்கு சென்ற கன்னியம்மாள் தனது மருமகள் பூங்கொடியிடம் கணவரை பார்க்க வந்ததாக கூறியுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த மருமகள் "உங்க புருஷன் இங்க இல்லை, நானே நோய்வாய்ப்பட்ட கணவரை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு வருகிறேன். இதுல உங்க புருஷனைவேற பார்த்துக்கொள்ள வேண்டுமா?" என பதில் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி "உங்க புருஷன் செத்து போயிட்டாறு" என மருமகள் பூங்கொடி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி கன்னியம்மாள் அழுது கொண்டே வீட்டிற்கு வந்துள்ளார்.
மேலும், தனது கணவர் உண்மையில் இறந்து விட்டாரா? அல்லது உயிருடன் இருக்கின்றாரா? என தெரியாமல் தவித்து வந்த கன்னியம்மாள் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர், வீட்டில் மூதாட்டி மயங்கி கிடந்ததை பார்த்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி கன்னியம்மாள் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் தகவலறிந்து வந்த சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
join ETV Bharat WhatsApp channel click here (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:நாங்குநேரியில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு; ஒரு மாணவர் கைது! - Nanguneri Student Attack Issue