சென்னை: பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்றைய முன்தினம் தேனியில் அவரை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து, சவுக்கு சங்கர் காரிலிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய இருவர் மீதும், தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் வருகின்ற 17ஆம் தேதி வரை, 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷணன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், பிரபல பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர், சென்னை மாநகர குற்றப் பிரிவில், பெண் பத்திரிகையாளர் குறித்து இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அவரது இணையப் பக்கத்தில் வெளியிட்டது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மாநகர குற்றப்பிரிவு குற்ற எண் 154/ 24 பிரிவு, 294b, 354d, 506(1), 509 IPC மற்றும் பிரிவு 4 TNPHW சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? - எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன? - Savukku Shankar Assault Allegation