தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜியின் மனு; அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவு! - Senthil Balaji Vs ED - SENTHIL BALAJI VS ED

Senthil Balaji petition: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனு மீது, மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவு
செந்தில் பாலாஜியின் மனு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 4:38 PM IST

சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னர், செந்தில் பாலாஜி மனுவில் இன்று (மார்ச் 28) உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்க கோரி, செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களைக் கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

அந்த ஆவணங்கள் கிடைத்த பின் அதன் அடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும், அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால், தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விடுமுறை என்பதால், இந்த மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்.4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கு: தொடர்ந்து நடத்த அரசுக்கு உத்தரவிட முடியாது உயர்நீதிமன்றம்! - NEW SECRETARIAT CASE

ABOUT THE AUTHOR

...view details