தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பிள்ளைகளை படிக்க வையுங்க" - கடிதம் எழுதிவிட்டு காவலர் தற்கொலை.. கோயம்பேடு பகீர் சம்பவம்! - Chennai police suicide - CHENNAI POLICE SUICIDE

சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இரண்டாம் நிலை நுண்ணறிவு காவலர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட காவலர் இசக்கி முத்துக்குமார்(கோப்புப்படம்)
தற்கொலை செய்துகொண்ட காவலர் இசக்கி முத்துக்குமார்(கோப்புப்படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 3:58 PM IST

சென்னை: கோயம்பேடு K-10 காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை நுண்ணறிவு காவலராக பணிபுரிந்து வந்தவர் இசக்கி முத்துக்குமார். இவர், விருகம்பாக்கத்தில் மனைவி மற்றும் இரு மகன்களுடனும் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகன் தந்தை சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இசக்கி முத்துக்குமார் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விருகம்பாக்கம் காவல்துறையினர் இசக்கி முத்துக்குமார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:சென்னையில் உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கை எவ்வளவு? - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இசக்கி முத்துக்குமாரின் மனைவி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, அவரது வீட்டில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகவும், அதில், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்குமாறும் இசக்கி பாண்டியன் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், இசக்கி முத்துக்குமார் வெகு காலமாக பணியிட மாற்றம் கேட்டு வந்ததாகவும், அது கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காவலர் தற்கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கேகிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details