சென்னை: கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த ஆட்சியர்கள், கல்வி அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கல்வி நிலையங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜுவால், உயர் கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர், நேரில் கலந்துகொண்டர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கானோளி காட்சி மூலம் ஆலோசனையில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் NCC முகாமில், பள்ளி மாணவி பாலியல் துன்புறத்தல் விவகாரம் தொடர்பாக விவாதிக்கபட்டது. மேலும், தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
புகார் குழு:தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருகின்றன.இந்நிலையில் internal complaints committee என்று அழைக்கப்படும் உள் புகார் குழுவை அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் முறையாக அமைக்க வேண்டும். புகார்களை அளிக்க அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும்.
Anti drug club:மாணவ மாணவிகள் போதை பொருளுக்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க Anti drug club களை ஏற்படுத்த வேண்டும்.