சென்னை : ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில், இது குறித்து பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த், பாஜக நிர்வாகியுடன் சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார். பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட கல்வி அலுவலரை நேரில் சந்தித்து உரிய விளக்கம் கேட்க உள்ளதாக கூறி பள்ளியில் அமர்ந்த நிலையில், உடனடியாக காவல்துறை பள்ளிக்கு வெளியே அனுப்பினர்.
134 வது வார்டு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) பின்னர் செய்தியாளரகளிடம் பேசிய அவர், "பள்ளியில் ஆர்எஸ்எஸ்க்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாக தகவலறிந்து பள்ளிக்கு வந்தேன். ஆனால், இங்கு வேறு பிரச்னை நடந்துள்ளது. ஆன்மீக சொற்பொழிவாளரை பள்ளி தான் அழைத்து வந்திருக்கிறது. அவராக வந்து இங்கு கருத்துகளை திணிக்கவில்லை.
அவர் திருக்குறளையும், ஒளவையார் சொற்கள் குறித்து மேற்கோள் காட்டி பேசியுள்ளார். இவ்வாறு பேசியதற்காக பாடத்திட்டத்தில் இருந்து ஒளவையாரையும், திருவள்ளுவரையும் நீக்கிவிட முடியுமா?. மேலும், ரம்ஜான் பண்டிகையின் போது மாநராட்சி பூங்காவில் தொழுகை நடத்துவதற்கு அனுமதி கொடுக்கின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு பூங்காவில் விநாயகர் சிலை வைக்க மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி கொடுப்பார்களா?" என கேள்வி எழுப்பினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க :பள்ளிகளில் ஆன்மீக வகுப்பு தவறா? பரம்பொருள் மகாவிஷ்ணுவின் பேச்சு சர்ச்சை ஆனது ஏன்? - முழு விபரம் - tn Schools mahavishnu speech issue