சென்னை:சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்படத் தயாரானது. இந்த விமானத்தில் 157 பயணிகள் பணித்தனர். குறிப்பிட்ட நேரத்தில் விமானம் ஓடுபாதையிலிருந்து புறப்படத் தயாரானது.
அப்போது, திடீரென விமானத்தின் தலைமை விமானி கேபினில் அவசரகால எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதை அடுத்து பரபரப்படைந்த தலைமை விமானி, அவசரக்கால கதவைத் திறந்தது யார் என்று கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, விமானப் பணிப்பெண்கள் விமானத்தில் எச்சரிக்கை மணி இருக்கும் இருக்கைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, விமானத்தில் பெற்றோருடன் பயணித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் அவசர கால கதவைத் திறப்பதற்காக உள்ள பட்டனில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் ஸ்டிக்கரை கிழித்தது தெரிய வந்துள்ளது. இதனால் தான் அலாம் சத்தமிட்டதை அறிந்த விமானப் பணிப்பெண்கள் சிறுவனிடம் எச்சரித்துள்ளனர். மேலும், இது குறித்து தலைமை விமானியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.