தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 9:48 AM IST

ETV Bharat / state

சென்னை ஏர்போர்ட்டுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்.. விமான நிலைய அதிகாரிகள் கொடுத்த வார்னிங்! - Bomb Threat issue

Bomb Threaten at Chennai Airport: சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று சென்னை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதுபோன்று புரளியை கிளப்பி விடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபடும் புகைப்படம்
சென்னை விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபடும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் வெடித்துச் சிதறும் எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். அதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடனடியாக சென்னை விமான நிலையத்தில் உள்ள வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழு மற்றும் விமான நிலைய போலீசாருக்கு அவசர தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குநர் தலைமையில் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில், விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர் குழுவினர், விமான நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, "விசாரணையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வழக்கமான புரளியாகக் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புகள் சோதனைகள் நடந்து வருகின்றன.

மேலும், விமான நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள்கள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வெடிகுண்டு நிபுணர்களும், சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகப்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபடுகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இதுபோன்ற வெடிகுண்டு புரளிகள் தொடர்ச்சியாக வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதேபோல, இந்த மிரட்டலும் வெரும் புரளியாகத் தான் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகளை தொடங்கி நடத்தி வருகிறோம். இதனால், விமான சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இதைப் போன்ற புரளியை கிளப்பி விடும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குவைத் தீ விபத்து: தமிழர்கள் குறித்த தகவல்கள் அறிய உதவி எண்கள் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details