சென்னை:வருகிற அக்டோபர் 6ஆம் தேதி இந்திய விமானப்படை விமானங்களின் வீர சாகச நிகழ்ச்சிகள் மெரினா கடற்கரையில் நடக்கவுள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தில் இன்று (அக்.1) முதல் 8ஆம் தேதி வரையில் விமான சேவைகளின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை தினம்: இந்திய விமானப்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் அக்டோபர் 8 அன்று நாடு முழுவதும் உள்ள இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் அக்டோபர் 8ஆம் தேதி 92வது இந்திய விமானப்படை தினம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
விமானங்களின் வீர சாகசங்கள்:இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்.6ஆம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரையில் 72 விமானங்கள் வீர சாகசங்கள் நடைபெற உள்ளது. விமான சாகச நிகழ்ச்சியை சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை பொதுமக்கள் இலவசமாக கண்டு கழிக்கலாம் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
விமான சேவைகளின் நேரங்கள் மாற்றம்:விமானப்படை விமானங்களின் வீர சாகச நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதையொட்டி, நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளின் நேரங்களில் மாற்றம் செய்து இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (அக்.1) பகல் 1:45 முதல் மாலை 3:15 மணி வரையில், சென்னை விமான சேவைகள் நிறுத்தப்படும். இந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து எந்த விமானங்களும் புறப்படவும், தரை இறங்கவும் செய்யாது. மேலும், அக்டோபர் 2 முதல் 8ஆம் தேதி வரையில் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கூடுதல் இடைவெளிகளில் நிறுத்தப்படும்.