கோயம்புத்தூர்: கோயம்புத்தூர், ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு நிகழ்வானது நடைபெற்றது. இதனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மலிவு விலையில் மருந்துகள் அனைத்தும் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் எனபதற்காக மத்திய அரசின் சார்பில் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. மார்கெட் விலையை விட பாதிவிலைக்கு, குறைவான விலையில் இங்கு மருந்துகள் வழங்கப்படுகின்றது.
இந்தியா முழுவதும் இது பயனுள்ள திட்டமாக செயல்படுத்தப்படுகின்றது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விமர்சையாக இன்று கொண்டாடப்படுகின்றது. நாளை மறு தினம் கோவையில் நடைபெறும் விழாவில் நான் பங்கேற்கின்றேன். இந்துகளின் ஒற்றுமைக்காக பாலகங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை துவங்கினர். தமிழகம் முழுவதும் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகின்றது.
மத்திய கல்வித்துறை அமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தனர். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினால் அரசிடம் இருந்து பதில் இல்லை. புதிய தேசிய கல்வி கொள்கை அனைத்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. தாய் மொழி கல்வியை ஊக்குவிப்பது தேசிய கல்வி கொள்கை. இன்று கூட மத்திய கல்வி அமைச்சர் ட்வீட் போட்டிருக்கின்றார்.
யூடியூபர் மகாவிஷ்ணு விவகாரம் குறித்து, பாஜக ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் எச்.ராசா பதிலளிப்பார். AI தொழில் நுட்பங்களை நிறுத்த முடியாது. நாளிதழ், டிவி தாண்டி செல்போன் வந்திருக்கின்றது. இப்பொது AI வந்திருக்கின்றது. ஆக்கப்பூர்வமான விடயங்ளுக்கும் பயன்படும். முறையாக நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிட வேண்டும்.