வடிவேலு பாணியில் நாய்களுக்கு பிஸ்கட் போட்டு சைக்கிளை திருடிய மர்ம நபர் சென்னை:கொரட்டூர் பகுதியில் வடிவேலு பாணியில் நாய்களுக்கு பிஸ்கட் போட்டு, தன் சொந்த வீட்டிலிருந்து சைக்கிளை உரிமையோடு எடுத்துச் செல்வது போல் மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அம்பத்தூர் அருகே கொரட்டூர் காவல் எல்லைக்கு உட்பட்ட இரண்டாவது தெருவான ஆபிஸர் காலனி பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மகனின் விலை உயர்ந்த சைக்கிள் ஒன்று திடீரென மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன், தன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
அதில் மர்ம நபர் ஒருவர், சீனிவாசனின் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய்க்கு, வடிவேலு பாணியில் பிஸ்கட்டை போட்டு, மிகவும் சாதாரணமாக சைக்கிளை திருடிச் செல்வது பதிவாகியுள்ளாது. அந்த சிசிடிவி காட்சியை அவர் தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், இயல்பாக சைக்கிளை திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகளுக்கு பாலியல் வன்புணர்வு.. குழந்தை பிறந்த நிலையில் தந்தை போக்சோவில் கைது! - POCSO Case In Chennai