வேலூர்: வேலூரை அடுத்த அரியூரை சேர்ந்த பிரபல ரவுடி எம்.எல்.ஏ ராஜா மீது வேலூர் மாவட்டத்தில் உள்ள பாகாயம், அரியூர், வேலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஐந்து கொலை வழக்குகள், மூன்று கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கொலை முயற்சி வழக்கில் எம்.எல்.ஏ ராஜா, வேலூர் மத்திய சிறையில் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
ரவுடி ராஜா கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 2) இரவு அரியூர் பகுதியில் உள்ள டீக்கடையிலிருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை அதே பகுதியை சேர்ந்த தேஜாஸ் (23), அஜித்குமார் (23), ராஜேஷ் (23), சந்துரு (23) ஆகிய 4 பேர் கைது செய்தனர்.
இந்நிலையில் தற்போது கார்த்திகேயன் (25) என்ற 5வது நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரவுடி எம்.எல்.ஏ ராஜா வெட்டிக் கொலை செய்யப்படும் பதற வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த வீடியோவில் காரில் வரும் கும்பல், ரவுடி ராஜாவின் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு, கிழே இறங்கி அவரை சரமாரியாக நடுரோட்டில் வைத்து கொடூரமாக வெட்டிவிட்டு காரில் தப்பியோடிகிறது.
இந்த நிலையில், தற்போது கைதாகி உள்ள தேஜாஸ்(23) என்பவரின் மாமா காமேஷ் என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு ராஜா கொலை செய்தததாகவும், அதற்குப் பிறகு கமலேஷ் குடும்பத்தார் குறித்தும், தேஜாஸ் பற்றியும் அவர் தொடர்ந்து அவதூறாக பேசி வந்ததாகவும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், தேஜாஸ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எம்எல்ஏ ராஜா கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில், தாங்கள் அச்சமடைந்து ராஜாவை திட்டமிட்டு கொலை செய்ததாக தேஜாஸ் உள்ளிட்ட 4 நபர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ரவுடி எம்.எல்.ஏ ராஜா, வேலூர் மாவட்டத்தில் உள்ள குற்றப் பின்னணியில் உள்ளோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலூரில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை.. டீ குடிக்க சென்ற இடத்தில் கொடூரம்.. பரபரக்கும் க்ரைம் சீன்! - Rowdy MLA Raja Murder