தூத்துக்குடி:தூத்துக்குடியில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் அவ்வப்போது பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு அரசு மதுபானக் கடைகளில் ஊழியர்களை பட்டப்பகலில் ரவுடிகள் மிரட்டி மதுபானங்களை எடுத்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தாலும், முறையாக வழக்குப்பதிவு செய்யாமல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமலும் இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் காரணமாக, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், டாஸ்மாக் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஜூன் 24ஆம் தேதி தூத்துக்குடி சிவந்தா குளம் அரசு மதுபானக் கடைக்கு லாரி மூலம் மதுபானப் பெட்டிகள் கொண்டுவரப்பட்ட நிலையில், லோடுமேன்கள் கடைக்குள் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தனர்.