தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் பாதாள சாக்கடைக் குழியில் தவறி விழுந்த இளம்பெண்.. சிசிடிவி காட்சிகள் வைரல்! - woman falling into a drainage pit - WOMAN FALLING INTO A DRAINAGE PIT

Young Woman Falling Into A Drainage Pit: கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் வணிக வளாகம் முன்பாக மூடாமல் இருந்த பாதாள சாக்கடை குழியில் இளம் பெண் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதாள சாக்கடைக் குழியில் தவறி விழுந்த இளம்பெண்னின் சிசிடிவி புகைப்படம்
பாதாள சாக்கடைக் குழியில் தவறி விழுந்த இளம்பெண்னின் சிசிடிவி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 11:04 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்று காந்திபுரம் 100 அடி சாலை. இந்த சாலையின் இரு புறங்களிலும் துணி மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே இரு புறங்களிலும் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடைக் குழியில் தவறி விழுந்த இளம்பெண்னின் சிசிடிவி காட்சி (ETV Bharat Tamil Nadu)

இந்த சூழலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அங்கு பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டு மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். இது குறித்து பொதுமக்களும் வணிக நிறுவன உரிமையாளர்களும், பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால், மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அவ்வழியே நடந்து சென்ற இளம் பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென குழிக்குள் விழுந்துள்ளார். இதனைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது பெண்மணி பாதாள சாக்கடை குழிக்குள் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை குழியை மூடியதாக தகவக் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:தேசிய குத்துச்சண்டை போட்டி: நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை! - national boxing championship

ABOUT THE AUTHOR

...view details