தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணிப்பெண்ணைத் துன்புறுத்தல் வழக்கு: தவறான புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாக திமுக எம்எல்ஏ மகன் வாதம்! - Puzhal Jail

Case of Assaulting Housemaid: வீட்டு பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட தவறான புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாக, திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Case of Assaulting Housemaid
வீட்டு பணிப்பெண்ணைத் தாக்கிய வழக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 5:20 PM IST

சென்னை: வீட்டுப் பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2023 டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி தனிப்படை போலீசார் இருவரையும் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், புழல் சிறையில் உள்ள இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை எனவும், குடும்ப உறுப்பினர்போல பணிப்பெண்ணை நடத்தியதாகவும், அவரை கல்லூரியில் சேர்த்து அதற்கான கட்டணத்தையும் தாங்களே செலுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு இன்று (பிப்.21) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, மனுதாரர்களான திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மர்லினா ஆகியோரது தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி வாதாடினார்.

அப்போது வழக்கறிஞர் ஜான் சத்யன், "வீட்டு பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட தவறான புகாரில் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மர்லினா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு 30 நாட்களாக சிறையில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் மனு குறித்துப் பதிலளிக்க அவகாசம் கேட்டும் தனது வாதங்களை முன்வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக மனுதாரர்கள் தரப்பு கோரிகையை ஏற்ற நீதிபதி எம்.நிர்மல்குமார், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் மனு குறித்துப் பதிலளிக்க அவகாசம் வழங்கி, ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைய மறுதினத்திற்கு (பிப்.23) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:திருடுவதற்காக அரசியலுக்கு வரவில்லை; யாராலும் முழுநேர அரசியல்வாதியாக இருக்க முடியாது.. மநீம தலைவர் கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

ABOUT THE AUTHOR

...view details