தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (41). கூலித் தொழிலாளி இவர் நேற்று முன்தினம் அதே மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண் அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தயார், நடந்தவற்றை தங்களது உறவினர்களிடம் கூறி சுப்பிரமணியனை பிடித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து சுப்பிரமணியன் தப்பி ஓடியதாகத் தெரிகிறது. இது குறித்து மாற்றுத்திறனாளி பெண்ணின் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய சுப்பிரமணியனை வலை வீசி தேடி வருகின்றனர். கடந்த வாரம் பாப்பாநாடு அருகே இளம் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாக இருக்கும் நிலையில், தற்போது பட்டுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க:மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா இனிதே நிறைவு: 4 நாட்களில் 40 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை!