தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் மீண்டும் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு.. காரணம் என்ன? - Mansoor Ali Khan - MANSOOR ALI KHAN

Mansoor Ali Khan: திருப்பத்தூரில் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக, இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 10 பேர் மீது ஆம்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Mansoor Ali Khan
மன்சூர் அலிகான்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 11:47 AM IST

திருப்பத்தூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மளிகை தோப்பு பகுதியில், அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக, இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 10 பேர் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், அந்தந்த கட்சி தலைமையால் தேர்வு செய்யப்பட்டு, மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள், வாக்கு சேகரிப்பு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மளிகை தோப்பு - துத்திப்பட்டு இணைக்கக் கூடிய பாலாற்று பகுதியில், நேற்று (வெள்ளிக்கிழமை) காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இடையே ஆதரவு திரட்டினார்.

அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் மன்சூர் அலிகானுடன் செல்பி எடுக்கக்கூடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரசு அனுமதியின்றி கூட்டம் கூட்டியதாக மன்சூர் அலிகான் மற்றும் அவரது கட்சியினர் மீது ஆம்பூர் விஏஓ ராஜ்குமார், ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில், பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் மற்றும் அவரது கட்சி சார்ந்த 10 நபர்கள் மீது, அரசு உத்தரவை மீறி கூடுதல் மற்றும் அனுமதியின்றி கூட்டம் கூட்டியதற்காக 144, 188 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 19ஆம் தேதி தேர்தல் விதிமுறைகளை மீறி முன் அனுமதி பெறமால் மன்சூர் அலிகான் பொதுமக்களை சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக, அவர் மீது ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மதுரை எய்ம்ஸ் குறித்து மோடியிடம் கேட்டால் ஈபிஎஸ்-க்கு கோபம் வருவது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி - Minister Udhayanidhi Stalin

ABOUT THE AUTHOR

...view details