தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல்; கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு - MR Vijayabhaskar - MR VIJAYABHASKAR

AIADMK Election campaign: கரூரில் அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

AIADMK Election campaign
AIADMK Election campaign

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 7:50 AM IST

Updated : Apr 2, 2024, 3:34 PM IST

தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல்; கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

கரூர்:கரூர் அருகே தேர்தல் கண்காணிப்பு அதிகாரியை அடாவடி செய்து மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்ததாக அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் வினோத்குமார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும் வீடியோ பதிவுகள் செய்யவும், வீடியோ கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ பார்க்கும் குழுவின் (VST Team 1) அதிகாரியாக பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் நியமனம் செய்யப்பட்டார். தேர்தல் பணியை மேற்கொள்ள அவருக்கு அரசு வாகனம் TN 47 G 0529 என்ற பதிவெண் கொண்ட வாகனமும், வீடியோ கேமராவும் வழங்கப்பட்டு, ஓட்டுநர் கங்காதரன், ஒளிப்பதிவாளர் ஆகியோருடன் தேர்தல் பணியை செய்து வருகிறார்.

மண்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கரூர் சட்டமன்ற தொகுதியில் மார்ச் 31ஆம் தேதி காலை முதல் முதல் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் தங்கவேல் என்பவருடன் அவரை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், ரமேஷ்குமார், அதிமுக கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதணன் வேலாயுதம்பாளையம், கரைப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக், ஜெகன் உள்ளிட்ட பலரும் தெருமுனை பிரச்சாரம் செய்துவந்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்படி, தெருமுனை பிரச்சாரத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சுமார் 10 கார்களுக்கு மேல் மேற்படி வேட்பாளருடன் தெருமுனை பிரச்சாரத்திற்கு அணிவகுத்து வந்தன. இதையடுத்து நெரூர் அருகே உள்ள அரங்கநாதன்பேட்டையில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் வினோத்குமார் என்பவர் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதற்கு,

அதனைத்தொடர்ந்து 31.03,2024 ஆம் தேதி மதியம் 02.45 மணியளவில், நெரூர் அருகே உள்ள மறவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் மேற்படி அதிமுக கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கவேல், தேர்தல் பிரச்சார வாகனங்களுக்கு பின்னால் தேர்தல் கண்காணிப்பு குழுவுடன் அரசு வாகனத்தில் சென்றுள்ளனபோது, கரூர் மாவட்ட அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக கட்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதணன், கார்த்திக், ஜெகன் மற்றும் பலர் தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தின் முன்பு சட்டவிரோதமாக வழிமறித்துள்ளனர்.

தேர்தல் பணியை செய்ய விடாமல் தடுத்து வாகனத்திற்குள் இருந்த தேர்தல் கண்காணிப்பு பிரிவு அதிகாரி வினோத்குமாரைப் பார்த்து, "நீ ஓவரா பண்ற..வண்டிய தேக்குயா பார்க்கலாம்..யோவ்..ஓவரா ரூல்ஸ் பேசுகிறாய்" என்றும், "கேஸ் தான போடுவ போட்டுக்கோ" என்றும் ஒருமையில் பேசியும் பணி செய்ய விடாமல் தடுத்தும், மிரட்டல் விடுத்தது தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்தில் வினோத்குமார் அளித்த புகார் அடிப்படையில் , முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பிரச்சாரத்திற்கு புது ரக சேலை; வேட்பாளர் செருப்பை கையில் தூக்கிய உதவியாளர்.. சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்! - Nainar Nagendran Campaign Issue

Last Updated : Apr 2, 2024, 3:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details