தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 14 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதியதில் 5 பேர் படுகாயம்! - chennai car accident - CHENNAI CAR ACCIDENT

chennai car accident: சென்னையில் 14 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார், இருசக்கர வாகனம் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்களின் மீது மோதியதில் 5 பேர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து ஏற்படுத்திய கார்
விபத்து ஏற்படுத்திய கார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 10:20 AM IST

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நேற்று இரவு தனது சக நண்பருடன் காரில் இராயப்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை ஜாம்பஜார் பாரதி சாலை வழியாகச் செல்லும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அத்துடன் கார் நிற்காமல் அருகில் இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் உட்பட 5 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலும், கார் மோதியதில் இரண்டு இருசக்கர வாகனம், ஆட்டோ ஆகியவை சேதமடைந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பன் இருவரையும் பிடித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதன் பின்னர் ஜாம்பஜார் போலீசார் பிடிபட்ட சிறுவர்களை அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்ததுடன், சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட்டுக்கு உடந்தை.. மேலும் 2 குடியுரிமை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details