சென்னை:சென்னை ஐஐடி வேளச்சேரி நுழைவுவாயில் முன்பாக, வளாகத்துக்குள் இயங்கும் பள்ளிகளுக்கு மாணவர்களை விட செல்லும் பெற்றோர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் இன்று காலையில் போராட்டம் நடத்ததினர்.
அதாவது, 20 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வாகனங்களை இயக்கினால் 10 ஆயிரம் அபராதம், 6ஆம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களை அழைத்துச் சென்று விடுவதற்கு இங்கு அழைத்து வருவதற்கும் அனுமதி மறுப்பு போன்று ஐஐடி நிர்வாகத்தின் புதிய விதிகளை விதித்திருந்தது. ஆகையால், இந்த புது விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், "சென்னை ஐஐடி (Chennai IIT) வளாகத்தில் வாணி வித்யாலயா மற்றும் கேந்திர வித்யாலயா ஆகிய இரண்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிக்கு வேளச்சேரி பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் வேளச்சேரி கேட்டு வழியாக உள்ளே வருகின்றனர். தினமும் காலை மாலை என இரு வேலைகளில் சுமார் 3 ஆயிரத்து 600க்கு மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உடன் விபத்துகளும் ஏற்படுகிறது.
இதையும் படிங்க:240 பள்ளிகளில் சாலை பாதுகாப்பு பயிற்சி வழங்க போர்டு உடன் இணைந்த சென்னை ஐஐடி!
எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை பெற்றோர்கள் அவர்களின் வாகனங்களில் வந்து பள்ளிக்குள் விட்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு ஐஐடி வளாகத்திற்குள் இயங்கும் பேருந்துகள் மூலம் வந்து செல்ல முடியும். இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் விட்டு செல்ல வேண்டும் என விரும்பினால் பள்ளி துவங்குவதற்கு முன்பாக வந்து ஐஐடி வளாகத்திற்குள் இயங்கும் பேருந்துகள் மூலம் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து விட்டு பேருந்தில் திரும்பலாம்.
ஐஐடி வளாகத்தில் 20 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை இயக்க வேண்டாம் என தெரிவித்துள்ளோம் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் 20 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனத்தை இயக்கினால் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் போடவும் உத்தரவிட்டுள்ளோம். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பொழுது இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பிற்கு முன்னதாக இன்று காலையில் சென்னை ஐஐடி வேளச்சேரி நுழைவுவாயில் முன்பு பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் மாணவர்களை விட செல்லும் பெற்றோர்கள் 20கிமீ வேகத்துக்கு மேல் வாகனங்களை இயக்கினால் 10ஆயிரம் அபராதம், 6ஆம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களை அழைத்துச் சென்று விடுவதற்கு இங்கு அழைத்து வருவதற்கும் அனுமதி மறுப்பு போன்று ஐஐடி நிர்வாகத்தின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.