தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள்..தூத்துக்குடியில் மடக்கி பிடித்த போலீஸ்..டிரைவர் தப்பியோட்டம்..! - BEEDI LEAVES SMUGGLING

தூத்துக்குடியில், கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ 15 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பீடி இலை மூட்டைகளுடன் மினி லாரி
பீடி இலை மூட்டைகளுடன் மினி லாரி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 12:34 PM IST

தூத்துக்குடி: மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் பீடி இலை மூடைகள், மஞ்சள், வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க, போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தலை பிடித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை கடல் வழியாக பீடி இலை மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ் தலைமையிலான போலீசார், தெற்கு கடற்கரை சாலை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனர்.

இதையும் படிங்க:பெண் கழுத்தறுத்து கொலை.. நகைகளுடன் தப்பிய மர்ம நபர்கள்.. திருவாரூரில் நடந்த கொடூரம்..!

ஆனால், மினி லாரி நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று இனிகோ நகர் கடற்கரை அருகே மடக்கி பிடித்தனர். அப்போது வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி திரு வி.க. நகரை சேர்ந்த டிரைவர் போலீசாரிடம் பிடிபடாமல் கீழே இறங்கி தப்பியோடியுள்ளார்.

பின்னர் போலீசார் மினி லாரியை கைப்பற்றி அதை சோதனை செய்தபோது, அதில் 35 கிலோ எடை கொண்ட பீடி இலை பண்டல்கள் 42 மூட்டைகளில் இருந்தது தெரிய வந்தது, இதனை கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து ரூ. 15 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதனை தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய டிரைவர் மற்றும் அதன் உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details