வேலூர்: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்ராதேவி (35). இவர் வேலூரில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷத்திற்கு தனது மகனுடன் வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மே 14ஆம் தேதி அன்று இரவு, சத்துவாச்சாரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர், நிகழ்ச்சி முடிந்து சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் வேலூர் புதிய பேருந்து நிலையம் செல்ல நடந்து சென்றுள்ளனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சித்ராதேவி மற்றும் அவரது மகன் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர்.
அப்போது, சித்ராதேவி கூச்சலிட்டுள்ளார். ஆனால், அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், உடனடியாக சித்ராதேவி அருகில் உள்ள சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் இருகுறித்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன்பேரில், நகைகளைப் பறித்துச் சென்றது வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் (23) மற்றும் அவரது தம்பி ராஜா (21) என்பது தெரிய வந்துள்ளது. இவர்களை கைது செய்த போலீசார், 6 சவரன் தங்க நகையைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கொஞ்சம் அசந்த நேரத்தில் 5 சவரன் செயின் பறிப்பு.. கோவையில் மளிகை கடை பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!