கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி ஊராட்சி திருச்சிப்பள்ளி கிராமத்தில், நேற்று இரவு (பிப்.7) மின் டிரான்ஸ்பார்மரை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடிச் சென்றுள்ளனர். இதனால் நேற்றிரவு 11 மணி முதல் திருச்சிப்பள்ளி கிராமப் பகுதிகளில் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இது குறித்து ஊராட்சி வார்டு மன்ற உறுப்பினர் லக்கூரப்பா கூறுகையில், “பேரண்டப்பள்ளி ஊராட்சியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டு காப்பர் வயர்கள் திருடப்பட்டுள்ளன. டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டதை மின்வாரியத்தினருக்கு தகவல் அளித்தாலும் காலதாமதமாக வருவதுடன், மின் இணைப்பு வழங்க ஒரு வார காலம் எடுத்துக் கொள்வதால் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகும் சூழல் உள்ளது.