திருச்சி: திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், வெடிகுண்டு மிரட்டல் உடன், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் ஜாபர் சாதிக்கை விடுவிக்க கூறியும், சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் இருக்கும் இடம் தெரியும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, திருச்சி மாநகர போலீசார், வில்லியம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில்மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால், சோதனையின் முடிவில் எந்தவித வெடி பொருட்களும் கிடைக்கவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், திருச்சி மணிகண்டம் அருகே உள்ள மேக்குடியில் சாய் பாபா கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலை காந்திமதி என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார். இந்த நிலையில், அவரது மகன் கார்த்திகேயனுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம், நாளை 6 மணியளவில் பெரிய அளவில் வெடிகுண்டு வெடிக்கும் என மெயில் வந்துள்ளது.