தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திரப் போராட்ட பெண் தியாகி உடல் நல்லடக்கம்: கண் கலங்க வைத்த வளர்ப்பு நாயின் பாச போராட்டம்..

Women freedom fighter dead: மறைந்த 87 வயது சுதந்திரப் போராட்ட பெண் தியாகியை விட்டுப் பிரிய மனமில்லாத அவரது வளர்ப்பு நாய் அவரது உடலையே சுற்றி வந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் சுற்றியிருந்தவர்களை கண் கலங்க செய்துள்ளது.

பிரிய மனமில்லாத வளர்ப்பு நாய்
சுதந்திரப் போராட்ட பெண் தியாகி உடல் நல்லடக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 5:24 PM IST

திருவண்ணாமலை:திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சிம்ம தீர்த்தம் பகுதியில் வசித்து வந்தவர் தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா(87). சுதந்திரப் போராட்ட பெண் தியாகியான இவர் பாக்கிஸ்தானைச் சேர்ந்தவர்.

தேசப் பிரிவினையின் போது இவர் குஜராத் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து வந்து அங்கேயே வசித்து வந்துள்ளார். குறிப்பாகக் காந்தியடிகள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்திய போது அந்தப் போராட்டத்தில் இவர் பங்கேற்றுள்ளார். அதைத் தொடர்ந்து மும்பையில் ஆசிரியராக பணியாற்றினார்.

இவர் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக திருவண்ணாமலை பகுதியில் வசித்த தனது அண்ணன் மகன் குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (ஜனவரி 22) மாலை உயிரிழந்தார்.

இதையடுத்து, உயிரிழந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனையில் உடலை நல்லடக்கம் செய்ய முடியாமல் குடும்பத்தினர் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்த செய்தி அறிந்த சமூக சேவகர் மணிமாறன் அவரது உடலை முறைப்படி நல்லடக்கம் செய்ய உதவியுள்ளார்.

இதையும் படிங்க: ஆளுநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மட்டுமே அட்டண்டன்ஸ்.. அண்ணா பல்கலை சுற்றறிக்கையால் பரபரப்பு!

ஆதரவற்ற நிலையில் மரணம் அடைந்த சுமார் 2,275 உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்ட மணிமாறன் அதற்காக நடிகர் ரஜினிகாந்த் மூலம் சடலங்களை எடுத்துச் செல்ல வாகனத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மறைந்த சுதந்திரப்போராட்ட வீராங்கனை வளர்த்த காலபைரவர் எனும் வளர்ப்பு நாயானது அவரை பிரிய மனமில்லாமல் இறந்த வீட்டில் அவரது உடலைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து, நல்லடக்கம் செய்ய உடலை வாகனத்தில் ஏற்றியபோது அவரது வளர்ப்பு நாயும் வாகனத்தில் ஏறிக்கொண்ட நிகழ்வு குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமூக சேவகர் மணிமாறன் உயிரிழந்த சுதந்திரப் போராட்ட பெண் தியாகியின் உடலை தன் வாகனத்திலேயே எடுத்துச் சென்று முறைப்படி நல்லடக்கம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

ABOUT THE AUTHOR

...view details