கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நடைபெறும் பணிகள் வேகமாக நடக்கின்றது.
கோவை இராமநாதபுரம் பகுதி மக்களுக்கு குடி நீர், ஏடிஎம் அமைக்க விடாமல் உள்ளாட்சி பிரதிநிதிகள் இடையூறு செய்கின்றனர். மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றோம். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து குடி நீர், ஏடிஎம் அமைக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் மீதான தாக்குதல், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதை காட்டுகிறது.
அரசு மருத்துவர்கள் போதிய வசதிகள் இன்றி பணியில் இருக்கின்றனர். அரசு மருத்துவருக்கு இந்த மாதிரி நடந்து இருப்பதை சாதாரணமாக பார்க்க கூடாது. மருத்துவ ஊழியர்களின் பணிசுமைகளை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவரின் மீதான தாக்குதலை கண்டிக்கின்றோம். இந்த சம்பவம் தனிபட்ட சம்பவம் அல்ல, அரசாங்கத்தின் தோல்வி.
இதையும் படிங்க:புதுக்கோட்டையில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் ரூ.18 லட்சம் முறைகேடு..அமைச்சர் மா.சுப்பிரமணியன்!