தென்காசி: தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நாளை நிறைவடையும் நிலையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியனை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி நகர்ப் பகுதியான ஆசாத் நகரில் தொடங்கிய ரோடு ஷோ நிகழ்ச்சியானது 3 கிலோமீட்டர் தொலைவு நடைபெற்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இதில் பேசிய அவர், "பிரதமர் மோடி தமிழையும், தமிழ் மக்களையும் பெரிதும் நேசிக்கிறார். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வழங்கும் நிதியை மாநில அரசு திட்டமிட்டு மறைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. கிராம சாலைகள் மேம்படுத்தல், மகளிர் வளர்ச்சி, கழிப்பறை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தமிழகத்திற்குச் செய்து வருகிறது.
திமுகவில், D என்பது டைனஸ்ட்டிக் (Dynastic), M என்பது மணி லாட்டரிங் (money laundering), k என்பது கட்டப் பஞ்சாயத்து (katta panchayat) எனவும், குடும்ப கட்சி, பணம் கொள்ளை, உள்ளிட்டவை திமுக மூலம் செயல்படுவதாகத் தெரிவித்தார்". இந்நிகழ்ச்சியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதையும் படிங்க:90 வயதை கடந்த இந்திய ரிசர்வ் வங்கி! சர்வதேச அளவில் சந்தித்த சவால்களும்... சாதனைகளும்..! - 90 Years Of RBI