தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அண்ணாமலை உங்களுக்கு அன்புடன் அண்ணா, ஆனால் எனக்கு'... உருகிய வானதி சீனிவாசன்..! - vanathi srinivasan

annamalai separate party rumours: நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலையின் வெற்றிக்கு பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உருக்கமாக பேசினார்.

வானதி சீனிவாசன், அண்ணாமலை
வானதி சீனிவாசன், அண்ணாமலை (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 7:29 PM IST

கோயம்புத்தூர்: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக 'பீப்பிள் ஃபார் அண்ணாமலை' என்ற அமைப்பு ஏற்படுத்தபட்டு நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் நூற்றுக்கணக்கான தன்னார்வர்கள் ஈடுபடுத்தபட்டனர். அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வட கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் 'Modi 3.0' என்ற நிகழ்வு நடத்தப்பட்டது.

இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் பணி புரிந்த அந்த அமைப்பினருக்கும், பாஜக நிர்வாகிகளும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன், ''அண்ணாமலை உங்களுக்கு அன்புடன் அண்ணா, ஆனால், எனக்கு அன்புடன் தம்பி. அரசியல் தெரியாதவர்கள் கூட அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என தேர்தல் பணியில் ஈடுபட்டனர். குடும்பம், குழந்தை விட்டு அனைவரும் இந்தியாவில் வேலை பார்த்த காரணத்தினால் தான் மோடி இன்று ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார். கட்சிக்கும் செயலி உள்ளது. வாய்ஸ் ஆப் கோவை என்கிற செயலியும், கட்சியின் செயலியும் சேர்ந்து வேலை செய்யும்போது தான் வெற்றி நமக்கு கிடைக்கும்.

புதிதாக வந்தவர்கள் இத்தனை வருஷம் நீங்க என்ன செய்தீர்கள்? வாக்கு வாங்கி கொடுத்தீர்களா? எனக் கேட்டால் அங்கு வேலை நடக்காது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பாட்டால் தான் வெற்றி கிடைக்கும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உலகம் முழுவதும் எதிர்பார்த்த தொகுதி தான் கோவை. அண்ணாமலை வெற்றி பெறுவாரா என நாடு முழுவதும் இருந்த பலர் என்னிடம் கேட்டார்கள். பொது வாழ்க்கையில் தொடர்ச்சியாக இயங்குவதும், மக்களுக்கு தொண்டு ஆற்றுவதும் தான் கடமை.

வாய்ஸ் ஆப் கோவை அமைப்பும், பாஜகவும் சேர்ந்து செயல்பட்டால் நல்லது நடக்கும். தர்மத்திற்கு வேலை பார்ப்பவர்கள் நாம். நாடும், சமுதாயமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக வேலை பார்த்து வருகிறோம். 'வாய்ஸ் ஆப் கோவை' அமைப்பினரை மட்டும் அழைத்து பாராட்டி இருந்தால், அண்ணாமலை தனியாக கட்சி ஆரம்பித்து விட்டார்கள் என புரளி கிளப்பி விட்டு இருப்பார்கள். ஆனால், பாஜக நிர்வாகிகளையும் இங்கு அழைத்திருப்பதால், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக, 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலையை மையப்படுத்தி 'பீப்பிள் ஃபார் அண்ணாமலை' என்ற அமைப்பு துவங்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை தனி கட்சி ஆரம்பிக்கிறார் என வதந்திகள் வெளியான நிலையில் அந்த அமைப்பு 'வாய்ஸ் ஆப் கோவை' என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 24 நாட்களுக்கு சென்னை பீச் - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.. போக்குவரத்து நெரிசல் அபாயம்.. காவல்துறை தீவிர ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details