சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா இன்று சந்தித்தார்.
எச்.ராஜா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து எச்.ராஜா பேசியதாவது, “ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்தித்துப் பேசினேன். 5 ஆண்டுகளுக்கு முன்பாக குளித்தலையில் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சான்றிதழ் அளித்த ஊழல்வாதி செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை:செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஊழல் தடுப்பு துறை விசாரணை செய்ய ஆளுநர் அனுமதி கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, 'திமுக ஆட்சிக்கு வரும், அப்போது செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார்’ என்றார். அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி ஜெயிலுக்குச் சென்று விட்டார்.
தமிழகத்திற்கான நிதி: தமிழகத்துக்கு, மத்திய அரசு குறைவான நிதி ஒதுக்குவதாக யார் கூறியது. நேற்று பிரதமர் இரண்டு வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு ரயில்வே பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்ததை விட அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில், மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.10.6 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. அதுவே திமுக - காங்கிரஸ் கூட்டணி இருந்த 2004 - 2014 ஆகிய பத்து ஆண்டுகளில், தமிழகத்துக்கு ரூ.2.3 லட்சம் கோடி தான் ஒதுக்கப்பட்டது. அதேபோல், நான்கு மடங்கு அதிக நிதியை மத்திய பாஜக அரசு ஒதுக்கியுள்ளது.
என்னுடைய கேள்விக்கு தமிழக முதலமைச்சர், நிதியமைச்சர் பதில் அளிக்க வேண்டும். கடந்த பட்ஜெட்டில் உற்பத்தி மற்றும் முதலீட்டுச் செலவுக்கு எவ்வளவு சதவீதம் ஒதுக்கியுள்ளீர்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக நிதியமைச்சர் வழங்க வேண்டும். ‘நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு’ என்பது போல், இந்த கையாலாகாத தமிழக அரசு இவர்களுடைய கரப்ஷனை மூடி மறைப்பதற்கு மத்திய அரசை குற்றம் சாட்டுகிறார்கள்
பாஜக கட்சி விதிகளின் படி, ஆறு ஆண்டுக்கு ஒருமுறை கட்சி உறுப்பினர்கள் புதுப்பிப்பார்கள். அகில இந்திய அளவில் ஒரு பூத்துக்கு 200 பேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒன்றிய, நகராட்சி அனைத்து நிர்வாகிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை பிரதமர் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க உள்ளார்.
எடப்பாடி கட்சிக்கு எம்டியா? சேர்மனா?அதிமுக எப்படி செயல்படுகிறது. நண்பர் எடப்பாடி அந்தக் கட்சிக்கு எம்டியா அல்லது சேர்மனா? அதிமுகவினர் எதுவாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். நான் பாஜக கட்சி தொடங்கியபோது முன்னிலையில் இருந்தவன். பலரும் ராஜா பதவியிலேயே இல்லை என்று நினைக்கின்றனர். தொடர்ந்து, 32 ஆண்டுகளாக கட்சிப் பொறுப்பில் இருக்கிறேன். இப்போதும் கட்சி தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளேன்.
இன்றைக்கு கட்சியை வழிநடத்தும் குழுவுக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். பல அதிமுக அமைச்சர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பிலிருந்து நான் பாஜகவில் இருந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய குடும்ப விழாவிற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் வருவார்கள். அதனால் அவர்களை நண்பர் என்று குறிப்பிட்டேன்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Photo Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:"கல்வெட்டில் செந்தில் பாலாஜி பெயர் இல்லை" - எம்பி ஜோதிமணி வைத்த கோரிக்கை!