டெல்லி: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே தண்டுபத்து கிராமத்தில், திமுக சார்பில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூடடம் கடந்த மார்ச் 22ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி தலைமை வகித்தார். அப்போது பேசிய மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு பாஜக மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், இது சம்பந்தமாக அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருந்தார்.