மதுரை:தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, மதுரை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியை, போலீசார் இன்று (ஏப்.30) கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஒரு வாரம் கோடைக்கால ஓய்வுக்காகக் கொடைக்கானல் செல்லும் வழியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப்.29) மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி என்பவர், தமிழகத்தில் பரவி வரும் போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, கஞ்சா பொட்டலத்துடன் முதல்வருக்கு மனு அளிப்பதற்காக வந்தார்.
அதனைக் கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் முதல்வரிடம் அளிக்க வந்த மனுவில், “தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்குக் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களும் எளிதில் கிடைத்து வருகிறது.