கரூர் : கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற அரசியல் பயிலரங்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, "தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்ததாக செய்திகள் வருகின்றன. அதிலும், குறிப்பாக தென் மாவட்டங்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை எச்சரிக்கை ஆகியவை வந்து கொண்டிருக்கின்றன.
ஹெச்.ராஜா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) மாநில அரசு இதுவரை வெள்ளம் என்றாலே சென்னை பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த மாதம் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கடுமையான மழை பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே, எல்லா மாவட்டங்களிலும் அரசாங்கம் மக்களின் மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாஜக கேட்டுக்கொள்கிறது.
கடந்த நான்கு நாட்களாக சமூக வலைதளங்களில், ஹிந்து விரோத பதிவுகள் வந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதுவும் கார்த்திகை மாதம் துவங்கியதில் இருந்து சபரிமலைக்கு மாலை இட்டுள்ள, பக்தர்களை கிண்டலாக, இசைவாணி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் தொடர்ந்து இந்து விரோதமாக பேசி வருகின்றனர். எனவே, இதற்கு காவல்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், மிக மோசமான சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. மத மோதல்களை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சித்து வருகின்றன.
இதையும் படிங்க :நாடாளுமன்றத்தில் எதிரொலித்த 'அதானி பிடிவாரண்ட்'.. அமெரிக்கா கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா..?
நடிகை கஸ்தூரியை கைது செய்வதற்கு இரண்டு தனிப்படைகளை அமைத்த தமிழக காவல்துறை ஏன், மத மோதல்களை உண்டாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மற்ற மத தெய்வங்களை பற்றி, பாட்டு போடுவது, டான்ஸ் ஆடுறதுன்னு சூழ்நிலை வந்தால், தமிழ்நாட்டில் மதம் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனை தடுக்க வேண்டும்.
அதானி விவகாரம் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது தொடர்பான கேள்விக்கு, வங்கதேசத்தில் புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசுக்கு, போதிய கையிருப்பு பணம் இல்லை என்பதால் அதானி குடும்பம் மின்சாரம் வழங்கியது. தற்போது அதனை நிறுத்திக்கொண்டது. இதற்கு அமெரிக்கா சிபாரிசு செய்த போதும் அதனை அதானி குழுமம் நிராகரித்துவிட்டது.
இதனால் அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்குக்காக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அதானி நிறுவனம் சோலார் எனர்ஜி, சோலார் பவர் காண்ட்ராக்ட் வாங்குவதற்காக சில மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார் என கூறியுள்ளது.
அதில், முதலிடத்தில் தமிழ்நாடு தான் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரை கைது செய்ய வேண்டும் என ஏன் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பவில்லை? ஆந்திரா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பாஜக அரசு ஆட்சியில் இல்லை. எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியில் உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதனை அதானி பார்த்துக் கொள்வார். இதில் இந்திய பிரதமர் பதில் கூற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்