திருநெல்வேலி: திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று(ஏப்.13) நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு வீதி வீதியாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது குன்னத்தூர் கிராமத்தில் வாக்கு சேகரித்த போது அங்கு ஏராளமான பெண்கள் மற்றும் மூதாட்டிகள் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வரவேற்கத் திரண்டனர்.
இந்நிலையில் அங்குக் கூடியிருந்த மக்களிடம் நயினார் நாகேந்திரன் வணக்கம் வைத்தபடி தனக்குத் தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது மூதாட்டி ஒருவர் நயினார் நாகேந்திரனைப் பார்த்து தான் ஏற்கனவே வாக்களித்து விட்டேன் என்பதை உணர்த்தும் வகையில், நாசுக்காக ஆள்காட்டி விரலை உயர்த்தி காட்டினார்.