சென்னை:சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. மேலும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் என்பது இதுவரை தமிழகத்தில் செயல்படாமல் இருக்கிறது. முக்கிய அமைப்பு செயல்படாமல் இருக்கிறது என்று முதலமைச்சருக்கு தெரியவில்லையா? குற்றங்கள் அதிகமாக காட்டப்படக் கூடாது என்பதற்காக காவல்துறை எஃப்ஐஆர்-ஐ (FIR) பதிவிடாமல் மறைக்கிறார்கள்.
உதயநிதி ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை?
அண்ணா பல்கலைக்கழக மாணிவி பாலியில் வன்புணர்வு விவாகரத்தில் துணை முதலமைச்சர்க்கு செய்தியாளர்கள் சந்தித்து விளக்கம் கொடுக்க முடியவில்லை. அதுவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் உதயநிதி ஸ்டாலின் சிண்டிகேட் உறுப்பினராக இருந்தவர்.
குற்றம் சாட்டப்பட்டவர் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். அதற்கான ஆதாரங்களை நாங்கள் வைத்துள்ளோம். அமைச்சர் மா. சுப்பிரமணியன் காலை மேற்கொள்ளும் ஓட்டப்பந்தய பயிற்சி போல் செய்தியாளர்களை பார்த்து பயந்து ஓடுகிறார்.
திமுக கொள்கை
பஞ்சப்பாட்டு பாடுவது திமுகவின் கொள்கையாக உள்ளது. ரூ.44,662 கோடி மத்திய அரசு நிதியாக வழங்கியுள்ளது. ஆனால், இவர்கள் பள்ளிகளை மேம்படுத்துவது கிடையாது. அனைத்து அரசு பள்ளிகளும் தற்போது சீர் அழிந்து இருக்கிறது. பொங்கல் பரிசுத் தொகை என்பது ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வரும் வழக்கம். கடந்தாண்டு இதை கொடுக்க மாட்டோம் என்று சொன்னார்கள். அனைவரும் சண்டை போட்ட பின் அதை தருவதாக கூறினார்கள்," என்று கூறினார்.
இதையும் படிங்க:'விஜய், அண்ணாமலை புகைப்படத்தை மார்ஃபிங் செய்த யூடியூப் சேனல்' - மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!
சாட்டையடி போராட்டம் குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, மக்கள் அரசியலில் இருந்து ஒதுங்க கூடாது என்ற நோக்கத்தில்தான் எனது சாட்டையடி போராட்டத்தை நடத்தினேன். அரசியல் கட்சித் தலைவர்கள் இதை நகைச்சுவையாக பேசினாலும், எனது நோக்கமானது, மக்களை சென்றடைய வேண்டும் என்றார்
பாஜக அண்ணாமலை பேட்டி (ETV Bharat Tamil Nadu) மேலும், மதிமுக தலைவர் வைகோ இலங்கை பிரச்னையில் திமுகவை திட்டியது போல், யாரும் திட்டியிருக்க மாட்டார்கள். வைகோ கண் முன்னால் நாங்கள் 2026ஆம் ஆண்டு திமுகவை தமிழகத்திலிருந்து நீக்குவோம். நான் சாட்டையில் அடித்துக் கொண்டது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று தெரிவித்தார்.