கோயம்புத்தூர்:"மணிப்பூர் விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார், அவர் உட்பட எந்த அரசியல்வாதிகள் மணிப்பூர் செல்ல நினைத்தாலும் அவர்களோடு சென்று அங்குள்ள நிலையை விளக்க நான் தயாராக உள்ளேன்",என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆனந்த் டெல்டும்டே, ஆதவ் அர்ஜுனா யார் தெரியும்:அதில் முக்கிய விருந்தினராக வந்தவர் ஆனந்த் டெல்டும்டே அம்பேத்கரின் பேத்தியை திருமணம் செய்தவர். ஆனந்த் டெல்டும்டே ஒரு அர்பன் நக்சல். இவரது தம்பி மிலிம் தில் தும் படே 2021 ஆம் ஆண்டு கத்திரச்சவுலி வனத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நக்சல்கள் சுட்டுக் கொன்ற போது கொல்லப்பட்டவர். இரண்டாவது விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இவர் லாட்டரி அதிபரின் மருமகனாவர். அவர் திமுகவை மன்னர் ஆட்சி என விமர்சிக்கிறார். மேலும், அவரது மாமனார் தேர்தல் பத்திரங்களின் மூலம் திமுகவிற்கு 581 கோடியை வழங்கி உள்ளார். ஆதவ் அர்ஜுனா சபரீசனுக்கும் மிக நெருக்கமாக இருந்து கடந்த தேர்தலில் பணியாற்றியவர்.
மணிப்பூருக்கு விஜய்யை அழைத்து செல்ல தயார்:மணிப்பூர் விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார், அவர் உட்பட எந்த அரசியல்வாதிகள் மணிப்பூர் செல்ல நினைத்தாலும் அவர்களோடு சென்று அங்குள்ள நிலையை விளக்க நான் தயாராக உள்ளேன். விஜய் மணிப்பூர் விவகாரம் குறித்த அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அங்குள்ள பழங்குடியினர் பிரச்சனைகள், மியான்மர் நாட்டிலிருந்து ஊடுருவல், போதை கலாச்சாரம் ஆகியவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மணிப்பூரில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் போதைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை விட பாஜக ஆட்சியில் தான் அதிக அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த விதத்திலும் துப்பாக்கிச் சூடு இதற்கு தீர்வு இல்லை என பாஜக நினைக்கிறது. ஆக்கபூர்வமான ஜனநாயக முறையில் மணிப்பூர் விவகாரத்தில் பேசி தீர்வு காணப்படும்.
அப்போது மன்னர் ஆட்சி என தெரியவில்லை:தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார், அவர் விசிகவில் பொறுப்புக்கு வந்த போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டவர், அப்போது திமுக மன்னர் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது யார்? திமுக குடும்ப ஆட்சி செய்து வருகிறது என்றார், அதை கேட்டும் அக்கட்சி நிர்வாகி அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?