தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞானபுரம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், கியூ பிரிவு போலீசார் அங்கு சென்று பார்த்ததில், கலைஞானபுரம் கடலுக்குச் செல்லும் வழியில், சந்தேகத்திற்கிடமான வகையில் TN69 BQ 9901 என்ற வாகனப் பதிவெண் கொண்ட பிக்கப் லோடு வேன் சென்று கொண்டிருந்துள்ளது.
அதை நிறுத்தி சோதனை செய்ததில், 30 கிலோ எடை கொண்ட 44 மூட்டைகளில் 1,320 கிலோ பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கியூ பிரிவு போலீசாரால் விசாரணை செய்யப்ப்ட்ட நிலையில், இந்த பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும் தெரிய வந்துள்ளது.